அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுள் ஒட்டுக் கேட்காமல் இருக்க செய்ய வேண்டியவை…!

நாம் பேசுவதை கூகுள் ஒட்டுக் கேட்கிறது என்ற குற்றசாட்டு உண்மை என மெய்பிக்கும் வகையில் பல சம்பவங்கள் உங்களுக்கு நடந்திருக்கும்.

நீங்கள் உங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் பேசும் விஷயங்கள் தொடர்பான விளம்பரங்கள் உங்கள் போனில் தோன்றுவதை அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் பைக் வாங்குவது பற்றி உங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தால், ஸ்மார்போனில், பைக்குகள் தொடர்பான விளம்பரங்களைக் காணலாம். அதே போல் நீங்கள் வேறொருவரிடம் குறிப்பிட்ட போனை வாங்குவது பற்றி பேசினால், அது தொடர்பான விளம்பரங்கள் தொலைபேசியில் வர ஆரம்பிக்கும்.

போன் ஒட்டுக் கேட்பது போன்ற அனுபவம் உங்களுக்கு மட்டுமல்ல, ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் ஏற்படும் ஒரு அனுபவம். ஆனால், இது ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். அதைப் பற்றியும், அதனை தடுக்கும் வழிமுறை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கூகுள் நீங்கள் சொல்வதை எல்லாம் ரகசியமாகக் கேட்டு, அதன் அடிப்படையில் விளம்பரங்களை காண்பிப்பதால் இது நிகழ்கிறது. ஜிமெயில் மற்றும் பிளே ஸ்டோர் போன்ற பல கூகுள் சேவைகள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கிடைக்கின்றன. ஆனால், அவற்றை அணுக, தொலைபேசியில் கூகுள் கணக்கு வேண்டும். எனவே கூகுள் கணக்கு இல்லை என்றால் அதனை ஏற்படுத்த வேண்டும் அல்லது பழைய கணக்கில் உள்நுழைய வேண்டும். இதற்குப் பிறகுதான் நீங்கள் Google வழங்கும் பிற சேவைகளைப் பயன்படுத்த முடியும்.

See also  WhatsAppஇல் அறிமுகமாகும் அசத்தல் அம்சம்

கூகுள் ப்ளே டோரில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது, பல நேரங்களில் பயனர்கள் தற்செயலாக சில விஷயங்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள். அதில் மைக்ரோ போன் மற்றும் ஆடியோக்களுக்கான அணுகலும் அடங்கும். இதன் மூலம் நீங்கள் பேசுவதை அனைத்தையும் கூகிள் கேட்க முடியும். இதை தடுக்க ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் செட்டிங்க்ஸ் சென்று சில மாற்றங்கள் செய்ய வேண்டும்

கூகுள் உங்கள் பேச்சை ஒட்டுக் கேட்காமல் இருக்க…. நீங்கள் செய்ய வேண்டியவை

1. முதலில் உங்கள் ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் (Settings)செல்லவும்.

2. அதில் உள்ள கூகுள் (Google) ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

3. இதற்குப் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும், அங்கு உங்கள் Google ப்ரொபைலை காண்பீர்கள்.

4. இங்கே நீங்கள் Manage you Google Account என்ற விருப்பத்தை காண்பீர்கள். அதனை கிளிக் செய்யவும்.

5. கிளிக் செய்த பிறகு ஒரு புதிய பக்கம் போனில் தோன்றும்.

6. இங்கே நீங்கள் Data and privacy பிரிவில் கிளிக் செய்யவும்.

See also  ChatGPT குரல்வழி வசதி நிதி மோசடிக்கு வழிவகுக்கும் அபாயம்

7. கீழே ஸ்க்ரோல் செய்து, Web & App Activity ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

8. இங்கே குரல் மற்றும் ஆடியோ செயல்பாடுகளுக்கான Include voice and audio activity என்பதைக் காண்பீர்கள்.

9. இதில் உள்ள டிக் குறியை நீக்கவும்.

10. செட்டிங்க்ஸ் பிரிவில் இந்த மாற்றங்களை செய்வதன் மூலம், கூகுள் உங்கள் ஸ்மார்ட்போனின் மைக்ரோஃபோனை அணுக முடியாது. மேலும் உங்கள் உரையாடலைக் கேட்கவும் முடியாது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content