வட அமெரிக்கா

உக்ரைனுக்கு 225 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவி அறிவித்துள்ள அமெரிக்கா

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளிக்கிழமை (ஜூன் 7) உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் சந்திக்கவுள்ளார்.சந்திப்பின்போது உக்ரேனுக்கு அமெரிக்கா $225 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி வழங்குவது குறித்தும் தெரிவிக்கப்பட்டவுள்ளது.

கடந்த டிசம்பரில் அதிபர் ஸெலன்ஸ்கியின் வாஷிங்டன் பயணத்திற்குப் பிறகு இரு அதிபர்களும் நேரடியாகச் சந்தித்துக்கொள்வது இது முதல்முறை.அடுத்த வாரம் இத்தாலியில் நடைபெறவிருக்கும் ஜி-7 உச்சநிலை மாநாட்டின்போதும் இருவரும் மீண்டும் சந்தித்துக்கொள்வர்.

இந்த மாநாட்டில், உக்ரேனியப் படையெடுப்புக்குப் பிறகு முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்யச் சொத்துகளிலிருந்து $50 பில்லியனை உக்ரைனுக்கு உதவியாக வழங்குவது குறித்துக் கலந்தாலோசிக்கப்படும்.

US to send new $225-million military aid package to Kiev | News |  Bangladesh Sangbad Sangstha (BSS)

வியாழக்கிழமை (ஜூன் 6) பிரான்சின் நார்மண்டி வட்டாரத்தில் உரையாற்றிய பைடன், இரண்டாம் உலகப் போரின்போது கொடுங்கோலர்களை எதிர்த்து நடந்த போரையும் ரஷ்யாவை எதிர்க்கும் உக்ரைனின் போரையும் ஒப்பிட்டுப் பேசினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை ‘சர்வாதிகாரி’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் அண்மைய $225 மில்லியன் ராணுவ உதவியில் ராணுவத்திற்கான ஆயுதங்களும் ஆகாயத் தாக்குதலை எதிர்கொண்டு முறியடிக்கும் போர் விமானங்களும் அடங்கும்.

See also  போரை நிறுத்துவதற்காகவே கடவுள் எனது உயிரை காப்பாற்றியுள்ளார் - ட்ரம்ப்!

இந்தப் போரின் முடிவை மாற்றியமைக்கக்கூடிய வகையில் உக்ரேனுக்கு அமெரிக்கா இத்தகைய ராணுவ உதவியை வழங்க முயல்வதாகக் கூறிய அமெரிக்க தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகர் ஜோன் ஃபைனர், அமெரிக்காவிடமும் இவை அதிகம் கையிருப்பில் இல்லை என்றார்.

ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகள் தொடர்பில் முடிவெடுப்பது சிக்கலான பணி என்று அனைத்துலகப் பொருளியலுக்கான தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகர் தலீப் சிங் கூறினார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content