Site icon Tamil News

வெனிசுலாவின் ஏர்ஃபோர்ஸ் விமானத்திற்கு நிகரான விமானத்தை கைப்பற்றிய அமெரிக்கா!

வெனிசுலாவின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு நிகரான விமானம் அமெரிக்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர்களின் சொகுசு ஜெட் சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாகவும், அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டங்களைச் சுற்றி நாட்டிற்கு வெளியே கடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அரசு முறை பயணத்தின் போது பயன்படுத்திய வெள்ளை டசால்ட் ஃபால்கன் 900எக்ஸ் விமானம் டொமினிகன் குடியரசில் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த விமானம் புளோரிடாவுக்கு பறந்ததாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

சான் மரினோவில் பதிவுசெய்யப்பட்ட இந்த விமானம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கயானா மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமானம் கைப்பற்றப்பட்டுள்ளமையானது ஒரு தெளிவான செய்தியை மதுரோ அரசாங்கத்திற்கு அனுப்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அதாவது வெனிசுலா அதிகாரிகளின் நலனுக்காக அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக வாங்கிய விமானங்கள் சூரிய அஸ்தமனத்தில் பறக்க முடியாது என்ற செய்தியை அனுப்புவதாக கூறப்படுகிறது.

Exit mobile version