இலங்கை சுங்கத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
சுங்கம் தொடர்பான தகவல்கள் மற்றும் விபரங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுங்க லெட்டர் ஹெட்கள், தொலைபேசி இலக்கங்கள் மாத்திரமன்றி சுங்க அதிகாரிகளின் பெயர்களையும் மோசடி செய்பவர்கள் பயன்படுத்தி வருவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
இனந்தெரியாத நபர்களின் கணக்குகளில் ஒருபோதும் பணத்தை வைப்பிலிடுவதில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான மோசடிச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் நபர்கள் குறித்து தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)