ஜெர்மனியில் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு மாணவர்களால் காத்திருந்த அதிர்ச்சி

ஜெர்மனியில் ஹம்பேர்க் நகரத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர் மீது பாடசாலையில் கல்விக்கற்கின்ற மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்திருக்கின்றது.
குறிப்பாக ஹம்பேர்க்கில் உள்ள மெண்டர்ஷோசியுல் மற்றும் பிளக்ஷேசியுல் என்று சொல்லப்படுகின்ற பாடசாலைகளில் இவ்வாறு மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக 12,13,14 வயதுடைய மாணவர்கள் ஒரு ஆசிரியரை தாக்கியதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொண்ட மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதல் செய்வதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த மாணவர்களின் பெற்றோர்களைிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
(Visited 10 times, 1 visits today)