இலங்கையில் கிடுகிடுவென உயரப்போகும் மோட்டார் சைக்கிள்களின் விலை
ஜனவரி முதலாம் திகதி முதல் இந்நாட்டில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப் போகிறது.
இதுவரை வாகனங்களுக்கு அறவிடப்படாத VAT புதிய திருத்தத்தின் மூலம் மோட்டார் சைக்கிள்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம்.
மோட்டார் சைக்கிள் ஒன்றின் விலை 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிளான CT100 ரக மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ஏழு இலட்சம் ரூபாவாகும் என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)