Site icon Tamil News

நாளை கூடுகிறது அரசியல் அமைப்பு பேரவை!

தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த சில தினங்களில் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (9) நண்பகல் 12 மணிக்கு கூடவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய ஆணைக்குழுக்களின் நியமனங்களை தாமதப்படுத்துவது வீண் செயல் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே அந்த ஆணைக்குழுக்களை விரைவில் நியமித்து முடிவு எடுக்கப்படும் என தான் நம்புவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Exit mobile version