Site icon Tamil News

வங்காள தேசத்தில் நீடித்துவரும் போராட்டம் : பொலிஸ் அதிகாரி உயிரழப்பு!

காபந்து அரசாங்கத்தின் கீழ் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தக் கோரி வங்காளதேச எதிர்க்கட்சிகளின் போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில்  பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் சமீபத்தில் போராட்டங்களை தொடங்கின.

அதன்படி இன்று (29.10) இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் டாக்காவில் இடம்பெற்று வரும் போராட்டங்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களை பிரயோகித்ததன் காரணமாக மோதல் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Exit mobile version