இன்று ஆரம்பமாகவுள்ள ICC ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்த தொடர் நாளை அகமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
ஒவ்வொரு உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கும் போது அனைத்து அணியின் கேப்டன்களும் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பையுடன் 10 அணியின் கேப்டன்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த புகைப்படத்தை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
(Visited 4 times, 1 visits today)