குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டு 09 எகிப்தியர்களை தடுத்துவைத்துள்ள கிரேக்க பொலிஸார்!
ஒன்பது எகிப்திய ஆண்களை “மனிதாபிமானமற்ற” முறையில் நடத்தியதாக கிரேக்க பொலிசார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கப்பல் விபத்து தொடர்பில் குறித்த 09 பேரிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். இருப்பினும் தெற்கு நகரமான கலமாட்டாவில் உள்ள ஒரு நீதிமன்றம் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அதிகார வரம்பு இல்லாததால் நிராகரித்துள்ளது.
எவ்வாறாயினும் காவல்துறையினர் தற்போதும் அவர்களை தடுத்துவைத்துள்ளனர். இது தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பாகிஸ்தான், சிரியா மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த 700 பேர் வரை லிபியாவில் மீன்பிடி இழுவைப்படகில் பயணித்ததில் குறித்த படகு விபத்தில் சிக்கியது. இதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர்.
மத்தியதரைக் கடலில் நடந்த மோசமான விபத்துக்களில் ஒன்றாக இது அரியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.