கொழும்பு பல்கலை மாணவர்கள் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (26) கால அவகாசம் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை குண்டுகளால் தமது கல்விக்கு இடையூறு விளைவித்தமையினால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேர் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த மனு இன்று (26) நீதிபதிகளான பிரிதி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்படி, சம்பந்தப்பட்ட வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க 7 வார கால அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, மனுவை அடுத்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பரிசீலிக்க உத்தரவிட்டது.