உடல் எடையைக் குறைக்க உதவும் பானங்களினால் ஆபத்து – எச்சரிக்கும் மருத்துவர்கள்

உடல் எடையைக் குறைக்க உதவும் பானங்களில் எடை கூடுவதற்குக் காரணமாக உள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
சர்க்கரைக்குப் பதில் அதிலிருக்கும் இனிப்புச் சேர்க்கும் பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் இந்த ஆபத்துகள் உள்ளது.
அவற்றில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்புப்பொருளான சுக்ரோலோஸ், பசியைத் தூண்டிவிடுவதாக ஆய்வின் முடிவு குறிப்பிட்டது.
அந்தப் பானங்களை அருந்தும்போது உடலுக்குத் தேவையான கலோரிகள் கிட்டாமல் மூளையில் பசியை அதிகரிக்கும் உணர்வை சுக்ரோலோஸ் ஏற்படுத்துவதாக ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண சர்க்கரை கலந்த நீரைப் பருகுவோரைவிட சுக்ரோலோஸ், கலந்த நீரைப் பருகுவோருக்கு 20 சதவீதம் வரை பசி கூடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் உடற்பருமன், உடல் நலப் பாதிப்பு ஆகியவற்றிற்கு சுக்ரோலோஸ், கலந்த பானங்கள் காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாய்க் கிடைத்த ஆய்வின் முடிவு குறித்து மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டார்.
ஆனால் முறையான ஆய்வுகளின் அடிப்படையிலும் சுகாதார நிபுணர்களின் பரிந்துரையின்படியும் சுக்ரோலோஸ், பயன்படுத்துவதாக உடல் எடை குறைக்க உதவும் பானத்தைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
உடற்பருமனைத் தவிர்க்க செயற்கை இனிப்புப்பொருள்கள் அடங்கிய உணவைத் தவிர்ப்பது சிறந்தது என ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.