Site icon Tamil News

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் உடல் தூதரகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை

இஸ்ரேலில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்களின் போது உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் பூதவுடல் தூதரகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவரது குடும்ப உறுப்பினர்களை வீடியோ தொழில்நுட்பம் மூலம் தொடர்பு கொண்டு உடலை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என தூதுவர் தெரிவித்தார்.

இஸ்ரேலில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் தொடர்பில் தான் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலில் உள்ள சில இலங்கையர்கள் வருடாந்த விடுமுறையை பெற்றுக்கொண்டு அடுத்த சில நாட்களில் நாடு திரும்புவார்கள் எனவும் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version