Site icon Tamil News

நிகழ்காலத்தின் பண்டைய நகரம் : கிரேக்கத்தில் இருக்கும் விசித்திர தீவு!

கிரேக்க தீவில் கார்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மக்கள் கோவேறு கழுதைகளை சவாரி செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள்.

கிரீஸின் சரோனிக் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதி அமைதியான ஹைட்ரா தீவு அமைந்துள்ளது.

சிறிய தீவான இப்பகுதியில் சுமார் 2,000 மக்கள் வசிக்கிறார்கள். இருந்தபோதிலும், கோடை மாதங்களில், விடுமுறைக்குச் செல்வோர் மற்றும் பருவகால ஊழியர்களின் வருகையால் ஹைட்ராவின் மக்கள் தொகை சுமார் 10,000 ஆக அதிகரிக்கிறது.

ஆயினும்கூட, சலசலப்பான தீவுகளான மைக்கோனோஸ் அல்லது சாண்டோரினியுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகத்தான் காணப்படுகிறது.

இந்த தீவில் அனைத்து சக்கர போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அனைத்து விதமான வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகாலப்பகுதியில் இருந்த தீவின் உண்மையான அழகை பாராமரிக்கவும், சூழல் பாதுகாப்பை கருத்திற்கொண்டும் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பைக்குகள் அல்லது கார்கள் இல்லாமல், மக்கள் கழுதைகள், கோவேறு கழுதைகள் மற்றும் குதிரைகளின் மீது பயணம் செய்கிறார்கள். தற்போதைய நவீன காலத்தில் நாம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு சொற்க பூமிதான் கிரேக்கத்தில் அமைந்துள்ள இந்த தீவாகும்.

 

Exit mobile version