நிரந்தர போர் நிறுத்தம் கோரி வெள்ளை மாளிகை முன் உண்ணாவிர போராட்டத்தில் இறங்கிய அமெரிக்க நடிகை
அமெரிக்க வெள்ளை மளிகை முன்பாக நடிகை சிந்தியா நிக்சன் காசாவுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தற்போது மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க ஜனாதிபதி வரவேற்றுள்ளார்.அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்த பணியில் தான் தொடர்ந்து சில நாட்கள் ஈடுபட்டதாகவும், அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் கூடுதல் நிதியுதவியை பாலஸ்தீனியர்களுக்கு வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் கோரி அமெரிக்க உரிமைவாதிகள் உண்ணாவிரப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.வெள்ளை மாளிகைக்கு வெளியே தொடங்கிய இந்த போராட்டத்தில் பிரபல நடிகையும், முற்போக்கு வழக்கறிஞருமான சிந்தியா நிக்சனும் இணைந்துள்ளார்.அவர் தனது கையில் ஏந்திய பதாகையில், ‘பைடன், உங்களால் காசா பசியால் வாடுகிறது. நிரந்தர போர் நிறுத்தம் இப்போதே வேண்டும்’ என எழுதப்பட்டுள்ளது.
மேலும் சிந்தியா இதுகுறித்து கூறுகையில், ‘தற்போதைய போர்நிறுத்தம் தொடர வேண்டும் என்று நாங்கள் அவரிடம் கேட்டுக் கொள்கிறோம், மேலும் நிரந்தர சமாதானத்தை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் அதை கட்டியெழுப்ப வேண்டும்.
மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதற்கும், பட்டினி கிடைப்பதற்கும் அமெரிக்க வரி டொலர்கள் உதவுவதை நாம் அனுமதிக்க முடியாது. எப்போதும் நடக்க கூடாது என்பது எவருக்கும் எப்போதும் நடக்க கூடாது என்பது தான்’ என தெரிவித்துள்ளார்.
14 பில்லியன் டொலர்களுக்கு மேல் இஸ்ரேலுக்கு வழங்குவதாக பைடன் உறுதியளித்தது இஸ்ரேலிய வன்முறைக்கு பங்களிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஐந்து நாட்கள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.