காஸாவில் அடுத்த 2 வாரங்களில் மீண்டும் தற்காலிக போர் நிறுத்தம்?
காஸாவில் அடுத்த 2 வாரங்களில் மீண்டும் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கத்தார் அரசாங்கம் இது தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் நாட்டு பிரதநிதிகள், இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகளை பாரிஸில் வைத்து சந்தித்தனர்.
எஞ்சியுள்ள பிணைய கைதிகளை ஹமாஸ் விடுவித்தால், காஸாவில் 6 வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என இஸ்ரேல் தரப்பிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதற்கு இஸ்ரேல் அரசு சம்மதம் தெரிவித்த நிலையில், ஹமாஸும் ஓரளவுக்கு ஒத்துக்கொண்டதாக கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)