இலங்கையில் வாகன இறக்குமதிக்கு இடைக்காலத் தடை!

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)