இலங்கை

மாவீரர் தினத்திற்கு சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் ஆடை அணிந்த இளைஞன் பிணையில் விடுதலை

மாவீரர் தினத்தில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு புலிச் சின்னம் மற்றும் விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இன்று புதன்கிழமை இந்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றில் எடுக்கப்பட்ட போது குறித்த இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமாஅதிபர் திணைக்களம் ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த இளைஞரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொடிகாமத்தைச் சேர்ந்த 24வயதான இளைஞன் ஒருவர் கடந்த மாவீரர் தினத்தன்று புலிச் சின்னம்
மற்றும் பிரபாகரனின் படம் பொறித்த ஆடையுடன் தோன்றியமைக்காகப் நவம்பர் 28ம் திகதி கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)
See also  இலங்கை முழுவதும் 12 மாவட்டங்களில் விசேட தட்டம்மை தடுப்பூசி திட்டம் ஆரம்பம்
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content