Site icon Tamil News

விரைவில் ஸ்வீடன் வெளியுறவு அமைச்சர் பில்ஸ்ட்ரோம் பதவி விலகல்!

ஸ்வீடன் வெளியுறவு மந்திரி டோபியாஸ் பில்ஸ்ட்ரோம் பதவியில் இருந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வாரம் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கன்சர்வேடிவ் மிதவாதக் கட்சியின் உறுப்பினரான பில்ஸ்ட்ரோம் ஒரு பதிவில், “அடுத்த வாரம் பாராளுமன்றம் தொடங்கும் போது வெளியுறவு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை நான் இன்று பிரதமரிடம் தெரிவித்ள்ளதாக . X இல்.பதிவிட்டுள்ளார்.

2022 அக்டோபரில் வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற 50 வயதான அவர், அரசியலில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளார்.

“டோபியாஸின் தலைமையில் அரசாங்கம் ஸ்வீடன் வெளியுறவுக் கொள்கையின் முன்னுரிமைகளை தெளிவாக மாற்றியுள்ளது” என்று பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.

முன்னர் இடம்பெயர்வு அமைச்சராகப் பணியாற்றிய பில்ஸ்ட்ரோம், சில காலமாக பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறினார்.

Exit mobile version