குடியேற்றத்திற்கான விதிகளை கடுமையாக்க சுவீடன் திட்டம்
சுவீடன் மிகவும் திறமையான தொழிலாளர்களின் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர் குடியேற்றத்திற்கான நிபந்தனைகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது.
இத்தகைய யோசனை தொழிலாளர் குடியேற்றத்திற்கான புதிய விதிகள் பற்றிய அறிக்கையின் மூலம் முன்வைக்கப்பட்டன.
திறமையான மற்றும் அதிக திறன் கொண்ட தொழிலாளர்கள் பற்றாக்குறை இருந்தபோதிலும், சுவீடனுக்கு குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களும் தேவையாக உள்ளது.
இருப்பினும், இடம்பெயர்வு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த குறைந்த திறமையான பதவிகளில் பலவற்றை ஏற்கனவே ஸ்வீடனில் வசிக்கும் நபர்களால் நிரப்ப முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக குறைந்த திறன் கொண்ட தொழில்களில், ஒழுங்குமுறை கட்டமைப்பை துஷ்பிரயோகம் செய்வதில் விரிவான சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.