ஐஸ்லாந்தில் அவசரகால நிலை பிரகடனம்
ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன
14 மணி நேரத்தில் சுமார் 800 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மிகப்பெரிய நிலநடுக்கமாக கிரைண்டா விக்குக்கு வடக்கே 5.2 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியிலுள்ள கிரிண்டவிக் ஊர்வாசிகளை ஊரைவிட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏறக்குறைய 4,000 பேர் வசித்து வருகின்றனர்.
குறித்த பகுதிக்கான அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
(Visited 4 times, 1 visits today)