பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறிய இலங்கையர்கள்

11 இலங்கையர்கள் காசாவில் இருந்து ரஃபா எல்லை வழியாக வெளியேறி தற்போது எகிப்தில் தங்கியுள்ளனர்.
பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுவதற்காக தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ரஃபா எல்லைக் கடவை திறக்கப்பட்டதை அடுத்து, தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் இரட்டைப் பிரஜைகள் நேற்று காசாவை விட்டு வெளியேற முடிந்தது.
ஆரம்பத்தில் 17 இலங்கையர்களை காசா நகரை விட்டு வெளியேற அதிகாரிகள் அனுமதித்திருந்தனர்.
எவ்வாறாயினும், 11 இலங்கையர்கள் மாத்திரமே ரஃபா எல்லைப் பாதையை பயன்படுத்தி எகிப்திற்குள் பிரவேசிக்க முடிந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது எகிப்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 2 times, 1 visits today)