இஸ்ரேல் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் – டுபாயில் நிர்க்கதி
இஸ்ரேல் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழு டுபாயில் நிர்க்கதியாகியுள்ளது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால், பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன.
இந்த நிலையில் Fly Dubai விமானம் ஒன்றில், இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழு டுபாயில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளது.
இஸ்ரேல் எல்லைக்குள் ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கிடைத்த தகவலையடுத்து, சில இலங்கையர்களுடன் விமானம் டுபாய்க்கு திருப்பி விடப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிராந்தியத்தில் விமான தாமதங்கள் இருப்பதாகவும், விமான அட்டவணையில் சாத்தியமான மாற்றங்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறும் அவர் இலங்கை நாட்டு பயணிகளிடம் கோரியுள்ளார்.