இலங்கை ஜனாதிபதித் தேர்தல் – ரணிலுக்காக உருவாகும் புதிய கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவளிக்க முன்வரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைவரினதும் அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மன்றத்தின் விசேட கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் புதிய கட்சியொன்று ஸ்தாபிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அங்கு தெரிவித்தார்.
அடுத்த வாரத்திற்குள் அதனை முன்னெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)