Site icon Tamil News

இலங்கையின் காபி உலகில் சிறந்த இடத்தில் இருக்கின்றது!! ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் புகழாரம்

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் கஹ்லட் அல் அமிரி, இலங்கையின் காபி உலகில் சிறந்ததொரு இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காபி பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்கும், இலங்கையின் காபியை சர்வதேச சந்தையில் பெறுமதி சேர்ப்பு பொருளாக அறிமுகப்படுத்துவதன் மூலமும் பெருமளவிலான அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது விவசாயத் துறையின் நவீனமயமாக்கல் மற்றும் உரங்களை தயாரித்தல் தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகின் சிறந்த காபி வகைகளில் இலங்கை காபியை இடம்பெறச் செய்ய முடியும் எனவும் அரபு நாடுகளில் இலங்கை காபி மிகவும் பிரபலம் எனவும் தூதுவர் விவசாய அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் காபியை பெறுமதி கூட்டப்பட்ட பொருளாக வெளிநாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தினால் இலங்கைக்கு பாரிய அளவிலான அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் என ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் கஹலட் அல் அமிரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாட்டிற்கு தேவையான யூரியா உரம் மற்றும் ஏனைய உரங்களை பெற்றுக் கொள்வதற்கும் ஆதரவு வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version