50 லட்சம் கடவுச்சீட்டுகளை கொண்டு வரும் இலங்கை – புதிய வசதிகளுடன் அறிமுகம்
புதிய பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட 50 லட்சம் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விரைவில் இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்படும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் நாடு 50,000 கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் எனவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் தற்போதைய நெரிசல் தவிர்க்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதுவரை வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை நாளாந்தம் வழங்குவது 1000 ஆக இருக்க வேண்டும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)