T20 உலகக் கோப்பை – நியூயார்க் புறப்பட்ட இலங்கை அணி

டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாத துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. ஜூன் 2 ஆம் தேதி துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் மோதுகின்றன.உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணி அமெரிக்காவின் நியூ யார்க் நகருக்கு புறப்பட்டது.
இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)