இலங்கை: வழிப்பறியில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

தெஹிவளையில் வீடொன்றில் கொள்ளையடித்து வெளிநாட்டு நாணயங்கள், தங்க நகைகள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதான பிசி மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது. .
தெஹிவளை புகையிரத நிலைய வீதியிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்து 1.9 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்தை திருடியுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி லியனாராச்சி தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்துள்ளது.
அவர் கல்கிசை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
(Visited 14 times, 1 visits today)