இலங்கை: ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கோர விபத்து : நால்வருக்கு நேர்ந்த கதி

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று பிற்பகல் குறித்த விபத்து சம்பவித்துள்ளதுடன் முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த நால்வரும் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டகலை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)