Site icon Tamil News

குறைந்த புவியீர்ப்பு விசையால் இலங்கைக்கு கிட்டியுள்ள நன்மைகள்

குறைந்த புவியீர்ப்பு விசை என்பது பூமியின் இயற்கையான வரப்பிரசாதம் என பேராதனை பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புவியீர்ப்பு விசை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே பேராசிரியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால், தரையில் இருந்து எதையாவது தூக்கி எறியும் போது, ​​மற்ற இடங்களை விட நாம் கொடுக்க வேண்டிய ஆற்றல் குறைவாக இருக்கும்.

உதாரணத்தை எடுத்துக் கொண்டால், அமெரிக்காவின் Point Canaveral இல் இருந்து ஒரு ரொக்கட்டை சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஆற்றலை விட குறைவான ஆற்றலுடன் நமது இலங்கைப் பிரதேசத்தில் இருந்து ராக்கெட்டை மேலே தூக்கிச் செல்ல முடியும்.

டொலர்களின் அடிப்படையில் இதுவும் பெரிய மதிப்பு. விண்வெளிக்கு வாகனங்களை அனுப்புவதற்கு இலங்கை சிறந்த இடம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறைந்த புவியீர்ப்பு பூமியின் இயற்கையான பரிசு என்று கூறப்படுகிறது. பூமியின் குறைந்த புவியீர்ப்பு புள்ளி இலங்கையின் தெற்கு முனையில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

அதாவது புவியீர்ப்பு விசை மாற்றம் தொடர்பாக நாசா பல வருடங்களாக நடத்திய ஆராய்ச்சிக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exit mobile version