Site icon Tamil News

இலங்கை பெற்றோர்களுக்கு விசேட அறிவிப்பு – பார்வை இழக்கும் பிள்ளைகள்

இலங்கையில் ஆறு பிள்ளைகளுக்கு, 10 மற்றும் 12 மீற்றர் இடைவெளியில் உள்ள எழுத்துக்களை வாசிக்க முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

முதலாம் தரத்தில் பிரவேசித்த மாணவர்களுக்கென பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கண், பற்கள் மற்றும் காது தொடர்பான பரிசோதனையின்போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் அழும் போது ஆறுதல் கூறவும், அவர்களுக்கு உணவளிக்கவும், மருந்து மற்றும் திரவங்களை வழங்கவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்பள்ளி வயது முதலே கையடக்கத் தொலைபேசிகளை வழங்கி வருவதாக சுகாதாரத் துறை மற்றும் ஆசிரியர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இது செய்யக்கூடாத ஒன்று எனவும் இதனால் எதிர்காலத்தில் பிள்ளைகளின் கல்வி கூட பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்களின் தலையீட்டில் பிள்ளைகளை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் பாவனையே சிறு பிள்ளைகளின் கண் கோளாறுகளுக்குக் காரணம் என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் முன்னாள் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் தர்மா இருகல்பண்டார நேற்று தெரிவித்தார்.

Exit mobile version