Site icon Tamil News

ஜெர்மனியில் வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

ஜெர்மனியில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கும் நிலையில் சட்டத்தை கடுமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க்படப்டுள்ளது.

அதாவது இந்த வாகன விபத்துக்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களால் நிகழ்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமானது வெகுவிரைவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது வாகன சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருப்பதற்கு சில நிபந்தனைகளை கட்டாயப்படுத்தவுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் தமது வாகன சாரதி அனுமதி பத்திரத்தை தொடர்ந்து வைத்து இருப்பதாயின் அவர்கள் வாகனங்களை ஓட்டிக்காட்ட வேண்டிய பரீட்சையில் தேர வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளன.

ஜெர்மன் நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்துக்கள் 33.9 வீதமான விபத்துக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களால் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version