Site icon Tamil News

தலைமுடி குட்டையாக இருந்ததால் பெண்ணை தாக்கிய தென் கொரிய நபர்

தென் கொரியாவில் பெண் கன்வீனியன்ஸ் ஸ்டோர்(மளிகை கடை) தொழிலாளி ஒருவரை பெண்ணியவாதி என்று நினைத்து நள்ளிரவில் தாக்கியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு நகரமான ஜின்ஜுவில் உள்ள கடைக்குள் நள்ளிரவு 20 வயது மதிக்கத்தக்க ஆண், அந்தப் பெண்ணை அடித்து உதைப்பதை சிசிடிவி காட்சிகள் காட்டுகிறது.

தலையிட முயன்ற 50 வயதுடைய மற்றொரு வாடிக்கையாளரையும் அவர் தாக்கினார்.

தலைமுடி குட்டையாக இருந்ததால் அவர் பெண்ணை தாக்கியதாகவும், அதனால் அவர் பெண்ணியவாதி என கருதியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

“உனக்கு குட்டையான முடி இருப்பதால், நீ பெண்ணியவாதியாக இருக்க வேண்டும். நான் ஒரு ஆண் பேரினவாதி, பெண்ணியவாதிகள் தாக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் அவளிடம் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தும் வரை அவர் தாக்குதலை தொடர்ந்தார்.

அவர் குடிபோதையில் இருந்ததாகவும், முன்பு ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version