Site icon Tamil News

இஸ்ரேல்-காசா மோதலை தடுக்க தென்னாப்பிரிக்கா தயாராக உள்ளது

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் சூழ்நிலையில் தலையிட தென்னாபிரிக்கா தயாராக இருப்பதாக ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

அவர் உடனடியாக போர் நிறுத்தத்தை கோருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆபிரிக்காவிலும் அதற்கு அப்பாலும் மோதல்களைத் தீர்ப்பதில் தமது நாட்டுக்கு அனுபவம் உள்ளதால், இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்தார்.

தென்னாபிரிக்க ஜனாதிபதி, பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியங்களால் ஆழ்ந்து மனமுடைந்து உள்ளதாகவும், தேவைப்படும் மக்களைச் சென்றடைய மனிதாபிமான வழித்தடங்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திறக்குமாறும் அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் காசாவிற்கான மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருளை துண்டித்துள்ளனர், மேலும் அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளும் மீட்கப்பட்டவுடன் முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று கூறுகிறார்கள்.

Exit mobile version