பிரான்ஸில் ரயில் தடக் கட்டுமானத்திற்கு இடையூறாக மாறியுள்ள நத்தைகள்!

பிரான்ஸில் வடமேற்குப் பகுதியில் இருக்கும் Brest நகரில் புதிய ரயில் தடம் திட்டமிடப்படும் நிலையில் கட்டுமானப் பணிக்கு நத்தைகள் பெரும் தடையாக மாறியுள்ளது.
தடம் அமையவிருக்கும் வட்டாரம் முழுதும் அரிய வகையாகக் கருதப்படும் Quimper நத்தைகள் வாழ்கின்றன.
ரயில் தடத்தைக் கட்டும்போது நத்தை வாழும் இடங்கள் அனைத்தையும் தவிர்க்கமுடியாததால் நத்தைகளை அகற்ற முயற்சி எடுக்கப்படுகிறது.
பராமரிப்பு ஊழியர்கள் நத்தைகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி வேறு இடத்துக்கு மாற்றுகின்றனர்.
இதுவரை 90க்கும் அதிகமான நத்தைகள் புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. விலங்கு ஆர்வலர் குழுக்கள் பிரெஸ்ட் நகரின் முயற்சியைப் பாராட்டியுள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)