Site icon Tamil News

இத்தாலியில் ஆறு மாத மழை ஒன்றரை நாளில் பெய்தது – 13 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் ஆறு மாத மழை ஒன்றரை நாளில் பெய்துள்ள நிலையில், 20க்கும் மேற்பட்ட ஆறுகள் கரைபுரண்டு ஓடியதால், 13 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

115 கிமீ (70 மைல்) தொலைவில் உள்ள போலோக்னா மற்றும் வடகிழக்கு கடற்கரைக்கு இடையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வியாழக்கிழமை மேலும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சுமார் 280 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரமான ரவென்னாவின் மேயர், இது ஒரு நூற்றாண்டில் நடந்த மிக மோசமான பேரழிவு என்று கூறினார்.

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை பேரழிவு என்று விவரித்தார்,

“இது மிகவும் மோசமான 48 மணிநேரம். தண்ணீரும் சேறும் எங்கள் முழு கிராமத்தையும் ஆக்கிரமித்துள்ளன,” என்று 71 வயதான ராபர்ட்டா லாஸரினி கூறினார்.

பொலோக்னாவின் தெற்கே உள்ள பொட்டேகினோ டி சோக்காவின் அவரது வீடு புதனன்று புயலால் தாக்கப்பட்டது. தெருக்கள், வீடுகள் மற்றும் தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், இன்னும் பயமாக இருப்பதாக ராபர்ட்டா கூறினார்.

“இங்கே அப்படி எதையும் நான் பார்த்ததே இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திணறினோம். இனி அப்படி நடக்காது என்று நம்புகிறேன்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version