Site icon Tamil News

G.C.E O/L பரீட்சைதான் மாணவரின் வெற்றியை தீர்மானிக்க வேண்டுமா ?

ஒரு மாணவரின் வெற்றியை (G.C.E) சாதாரண பரீட்சைதான் தீர்மானிக்க வேண்டுமா என்பது குறித்து   அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அலரி மாளிகையில் இன்று (16)   இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த விடயம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் கூறினார்.

இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து 7,342 ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலைகளுக்கு 1,729 ஆசிரியர்களும், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 626 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்வரும் 10 வருடங்களில் கல்வித்துறையில் ஏற்படவுள்ள தொழில்நுட்ப மாற்றங்களுக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

Exit mobile version