வட அமெரிக்கா

தொடர் கருச்சிதைவால் வருத்தத்தில் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!

நர்சரி ஊழியரான பெண் ஒருவர் குழந்தைகள் மீதான பற்றால் தாயாக வேண்டும் என்ற கனவில் இருந்தவர், தொடர் கருச்சிதைவு காரணமாக மனமுடைந்து இறுதியில் அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு வேல்ஸ் பகுதியில் குடியிருந்து வந்த 26 வயது Jemma Zoezee என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்துள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை உறுதி செய்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை உறுதி செய்துள்ளனர்.

ஜெம்மாவும் அவரது கணவர் அந்தோனியோவும் ஒன்றாக வாழ்ந்து வாழ்ந்தனர். தனது மனைவி குறித்து அந்தோனியோ தெரிவிக்கையில், எனக்குத் தெரிந்த மிக இனிமையான பெண் அவர். நீண்ட காலமாக உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புவதாகவும் ஜெம்மா கூறி வந்ததை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

தொடர்ந்து கருச்சிதைவு... ஆசை நிறைவேறாத வருத்தத்தில் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு | Wales Woman Miscarriages Desperate Found Hanged

ஆனால், தொடர்ந்து கருச்சிதைவு ஏற்பட்டதால், கடுமையான மனச்சோர்வில் அவர் இருந்தார் எனவும் விசாரணையில் அந்தோனியோ தெரிவித்துள்ளார். இப்படியான சூழலில் அவர் தமது வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

See also  அமெரிக்காவை தாக்கிய ஹெலேன் சூறாவளி - பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு

இந்த விசாரணை காலத்தில் ஜெம்மாவின் குடும்பத்தினர் எவரும் நீதிமன்றத்தில் கலந்துகொள்ளவில்லை. ஜெம்மாவின் சகோதரர் தெரிவிக்கையில், முதல்முறை கருச்சிதைவு ஏற்பட்ட போதே அவர் மனமுடைந்து போனார் எனவும், அவருக்கு போதுமான உதவிகள் கிடைக்காமல் போனது என்றே தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவருக்கு ஏன் தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுகிறது என்பதை எவரும் அவருக்கு விளக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார் ஜெம்மாவின் சகோதரர். அதுவே ஜெம்மாவை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்க செய்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content