Site icon Tamil News

இலங்கையில் அதிர்ச்சி – மனைவியை கொலை செய்த கணவன் செய்த செயல்

அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தில் தனது மனைவியைக் கொலை செய்த நபர் விபரீத முடிவொன்றை எடுத்துள்ளார்.

மனைவி உயிரிழந்த பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக கணவர் தனது மனைவியை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்த பின்னர் வீட்டுக்குள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான மனைவி மற்றும் 36 வயதான கணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த தம்பதிக்கு 12, 10 மற்றும் 6 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்த சம்பவம் நடந்த போது கடைசி மகன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.

குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக நோய் காவு வண்டி ஒன்று வந்துள்ளது. எனினும் அவர் உயிரிழந்தமை தெரிந்து கொண்ட ஊழியர்கள் சடலத்தை எடுக்காமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version