அமெரிக்காவில் அதிர்ச்சி – வேண்டுமென்றே காரை 2ஆம் மாடியில் மோதிய நபர்
அமெரிக்காவின் Pennsylvania மாநிலத்தில் நபர் ஒருவர் தமது காரை ஒரு வீட்டின் இரண்டாம் மாடியில் மோதியுள்ளார்.
விசாரணையின்போது அவர் அதை வேண்டுமென்றே செய்ததாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சாம்பல் நிறக் கார் ஒன்று வீட்டின் இரண்டாம் மாடியில் சிக்கிக்கொண்டிருப்பதைச் சம்பவம் குறித்தப் படங்கள் காட்டுகின்றன.
சம்பவம் நிகழ்ந்த போது வீட்டில் மூன்று பேர் வரை இருந்தனர். அவர்களுக்குக் காயம் ஏற்படவில்லை.
கார் ஓட்டுநர் வீட்டின் கூரையின் மீது ஏறிக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வீட்டின் இடது பக்கத்தில் சாலையின் கீழ் இருந்த சுரங்கக் கால்வாய்க்குள் வேகமாகச் சென்ற கார் காற்றில் பறந்து வீட்டின் இரண்டாம் மாடியில் மோதியது.
சம்பவத்தின் தொடர்பில் கார் ஓட்டுநர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.