Site icon Tamil News

ஸ்கொட்லாந்தில் முதல் தானியங்கி பேருந்து சேவை ஆரம்பம்!

உலகிலேயே முதல்முறையாக பிரிட்டனின் முதல் தானியங்கி பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து ஸ்காட்லாந்தின் ஃபோர்த் ரோடு பாலத்தின் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.

இத்திட்டத்தின் சோதனை முயற்சியாக இன்வெர்கீதிங் ஃபைஃப் மற்றும் எடின்பர்க் பூங்காவிற்கு அருகிலுள்ள பெர்ரி டால் வரை பேருந்து சேவை இயக்கப்பட்டது.

ஸ்காட்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் கெவின் ஸ்டீவர்ட் இந்த பேருந்தில் முதல் பயணியாக பயணம் செய்தார்.

மேலும் 2025ம் ஆண்டு வரை சோதனை அடிப்படையில் ஓட்டுனர் இல்லாத ஐந்து தானியங்கி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பேருந்திலும் வாகனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பாதுகாப்பு ஓட்டுநர் மற்றும் டிக்கெட் விற்பனையாளர் என இரண்டு பணியாளர்கள் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்டேஜ்கோச் தானியங்கி பேருந்துகள் எதிர்வினை நேரத்தைக் குறைப்பதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் வாரத்திற்கு சுமார் 10000 பயணிகள் பயணம் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version