உக்ரைனில் ரஷ்யாவின் தீவிர தாக்குல் : மேற்கத்திய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எப்-16 ரக போர் விமானங்கள் உட்பட வெளிநாடுகளில் இருந்து ரஷ்ய ராணுவத்திற்கு கூடுதல் ராணுவ உதவிகள் கியேவ் ராணுவத்திற்கு கிடைப்பதற்கு முன்பாக ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்ய படைகள் தங்கள் சுடுதிறனை டொனெட்ஸ்க் பிராந்தியத்தில், குறிப்பாக போக்ரோவ்ஸ்க் முன்னணியில் குவித்து வருவதாக உக்ரைன் ராணுவ தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தற்போதைய இராணுவ உதவி இன்னும் போதுமானதாக இல்லை என்றும், விநியோகங்கள் தாமதமாக வருகின்றன என்றும், உறுதியளிக்கப்பட்ட F-16 போர் விமானங்களின் விநியோகத்தை விரைவுபடுத்துமாறு, உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளிநாடுகளில் உள்ள நட்பு நாடுகளுக்கு முறையிட்டுள்ளார்.
மற்றும் மேலதிக வான் பாதுகாப்பு பேட்டரிகளை அனுப்புமாறு மேற்கத்திய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.