ரஷ்யர்கள் ஸ்காண்டிநேவிய நாட்டிற்குள் நுழைய தடை : அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நோர்வே!
2022 ஆம் ஆண்டில் விதிமுறைகள் கடுமையாக்கப்படுவதற்கு முன்னர் நோர்வே வழங்கிய சுற்றுலா விசாக்கள் அல்லது மற்றொரு ஐரோப்பிய நாடு வழங்கிய சுற்றுலா விசாக்கள் ஸ்காண்டிநேவிய நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் பிரதிபலிப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நீதி அமைச்சர் எமிலி எங்கர் மெஹல் கூறினார்.
நார்வே ஆர்க்டிக்கில் ரஷ்யாவுடன் 198 கிலோமீட்டர் (123 மைல்) நீளமான எல்லையைக் கொண்டுள்ளது.
கடந்த வாரம், நார்வேயின் முக்கிய நாளிதழான Aftenposten, PST என்ற சுருக்கப் பெயரால் அறியப்படும் நார்வேயின் உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனம், உளவுத்துறை சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்யர்கள் Kirkenes நகருக்கு அருகில் உள்ள Storskog என்ற ஒரே எல்லைக் கடவையில் நுழைவதைக் கண்டு கவலைப்பட்டதாகக் கூறியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோர்வேயில் நெருங்கிய உறவினர்களைப் பார்க்க வருபவர்கள் அல்லது நோர்வேயில் பணிபுரியும் அல்லது படிக்கும் ரஷ்யர்கள் உட்பட, புதிய நுழைவுக் கட்டுப்பாடுகளுக்கு விதிவிலக்குகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.