கார்கிவ் பகுதியில் உள்ள கிராமத்தை குறிவைத்த ரஷ்யா : 49 பேர் பலி!
வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ரஷ்ய படையினர் இன்று (05.10) நடத்திய தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கார்கிவ் பிராந்திய கவர்னர் ஓலே சினேஹுபோவ் கூறுகையில், கார்கிவின் குப்யான்ஸ்க் மாவட்டத்தில் உள்ள ஹ்ரோசா கிராமத்தில் சுமார் 13:15 (10:15 GMT) மணி அளவில் ஒரு ஓட்டல் மற்றும் ஒரு கடை தாக்கப்பட்டதாகவும், அப்போது ஏராளமான பொதுமக்கள் அங்கு இருந்ததாகவும் கூறினார்.
இடிபாடுகளுக்குள் மீட்புப் பணியாளர்கள் தத்தளிக்கும் காட்சிகளை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். குறித்த கிராமத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதா அல்லது ஏவுகணையை வீசியதா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)