இனி மும்பை அணிக்காக விளையாட மாட்டேன் என கூறிய ரோகித் சர்மா
ஐபிஎல் 2024 லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.
இதற்காக இரு அணிகளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுப்பட்டிருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பிளேயரும், இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கும் அபிஷேக் நாயரை சந்தித்து ரோகித் சர்மா உரையாடினார்.
அப்போது இந்த சீசனுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட மாட்டேன் என ஓபனாக பேசினார். அந்த வீடியோவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட நிலையில், சில மணி நேரங்களில் அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டது.
ஆனால், சோஷியல் மீடியாவில் ரோகித் சர்மா அபிஷேக் நாயருடன் பேசும் வீடியோ வைரலாகிவிட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா வெளியேறுவது இப்போது உறுயாகிவிட்டது. அபிஷேக் நாயருடன் ரோகித் பேசும்போது, ” மும்பை இந்தியன்ஸ் சூழல் இப்போது தலைகீழாக மாறிவிட்டது. எதுவும் சரியாக இல்லை.
அதற்கு முழு காரணம் அவர்களே தான். நான் இந்த அணிக்கு வருவதை கோயில் போல் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் எல்லாம் மாற்றிவிட்டார்கள். இதுதான் என்னுடைய கடைசி சீசன்” பேசியுள்ளார். இது அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உரையாடல் என்றாலும், கொல்கத்தா அணியின் சோஷியல் மீடியா டீம் அதனை கவனிக்காமல் இணையத்தில் பதிவேற்றி பின்னர் நீக்கமும் செய்துவிட்டனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நீண்ட நாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு திடீரென நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியாவை பெரும் தொகை கொடுத்து அணிக்கு அழைத்து வந்தது மும்பை இந்தியன்ஸ்.
அத்துடன் கேப்டனாக ரோகித் சர்மா தொடருவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டு, வீரர்களுக்கான வர்த்தகம் முடிந்ததும் ஹர்திக் பாண்டியாவை மும்பைக்கு கேப்டனாக அறிவித்தனர். இது மும்பை அணிக்குள் பெரும் சலசலப்பை உருவாக்கியது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களின் அதிருப்தியை வெளிப்படையாக காட்டினர்.