Site icon Tamil News

இலங்கையில் மீளவும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதிகரிக்கும் அபாயம் : மக்களின் நிலை என்ன?

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலை 420 ரூபாவை தாண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்  சன்ன ஜயசுமண நேற்று (16.11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்கவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து டீசல் மற்றும் பெற்றோலுக்கு VAT விதிக்கப்படும் என ஷெஹான் சேமசிங்க சபையில் முன்வைத்தார். இதன்போது டீசல் மற்றும் பெற்றோலில் விலை குறித்த கேள்வியை சன்ன ஜயசுமண எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்காமல் வெறும் சிரிப்பை மட்டுமே அமைச்சர் ஷெகான் சேமசிங்க வழங்கியிருந்தார்.

‘அப்படியானால், ஜனவரி மாதம் முதல் பெற்றோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 420 ரூபாவாக அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம்’ என ஜெயசுமண தெரிவித்தார்.

ஒருவேளை அமைச்சரின் கருத்துப்படி பெற்றோல், மற்றும் டீசலின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்கிளின் விலையும் அதிகரிக்க நேரிடும். இது மக்கள் மத்தியில் பாரிய சுமையாக மாறும்.

ஒருபுறம் வரவு செலவு திட்டம் மக்களின் அத்தியாவசிய பிரிச்சினைகளுக்கான அடிப்படையான தீர்வை முன்வைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் அரசாங்கமானது சமீபகாலமாக சில பொருட்களில் விலையை குறைப்பதுபோல் குறைத்து, மீளவும் அதிகரிப்பது அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version