இலங்கைக் குற்றவாளிகள் 42 பேருக்கு இன்டர்போல் ‘சிவப்பு நோட்டீஸ்’ பிறப்பிப்பு!
வெளிநாடுகளில் பதுங்கியிருந்த இலங்கைக் குற்றவாளிகள் 42 பேருக்கு இன்டர்போல் ‘சிவப்பு நோட்டீஸ்’ பிறப்பித்துள்ளது என்று பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தேடப்பட்டு வருவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், தேடப்படும் குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்துவர INTERPOL உதவி பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் புதிய பொலிஸ் சோதனைச் சாவடியை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார்.
இலங்கையின் சட்ட அமலாக்க அதிகாரிகள் தேடப்படும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாதாள உலகக் குழு உறுப்பினர் சலிந்து மல்ஷிகாவின் முக்கிய கூட்டாளியான ‘குடு சலிந்து’ இன்று காலை டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.