இலங்கையில் English For All திட்டத்தை அமுல்படுத்த தயாராகும் ரணில்
ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கிலக் கல்வியை வழங்குவதற்கான வெள்ளை அறிக்கையை கொண்டு வந்த போது மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பினால் பெருமளவிலான இளைஞர்கள் ஆங்கிலக் கல்வியை இழந்துள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டு இளைஞர் சமூகம் சார்பில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் விரிவுரையாளர்களை மக்கள் விடுதலை முன்னணி கொன்றுள்ளதாகவும், அவர்களின் செயற்பாடுகளால் இந்த நாட்டில் கல்வித்துறையில் 10 வருட பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்கள் விடுதலை முன்னணி இந்த அழிவை செய்யாவிட்டால், இன்று நாட்டில் சிறந்த கல்வி முறை இருந்திருக்கும்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, பல ஆண்டுகளாக இந்த நாட்டில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு ஜனதா விமுக்தி பெரமுனவே காரணமாகும்.
இதன்படி, யார் என்ன சொன்னாலும் English For All என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஆங்கிலம் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.