Site icon Tamil News

நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை தொடங்கவுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள்

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) பல கோரிக்கைகளை முன்வைத்து இன்ற (30 ஒக்டோபர்) முதல் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பை நடத்த தீர்மானித்துள்ளது.

அதன்படி, PHIU திங்கள் மற்றும் செவ்வாய் (31 அக்டோபர்) நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது.

இதேவேளை, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அலுவலக சேவைகள் மற்றும் ஏனைய மாகாண ஊழியர்களைக் கொண்டு நாளை நண்பகல் 12.00 மணிக்கு நாடளாவிய ரீதியில் பல அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்கவுள்ளன. பொதுச் சேவைத் துறை பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதவித்தொகையாக ரூ.100 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version