எரிபொருளை சேமித்து வைப்பதில் சிக்கல் : இலங்கை கோப் குழுவிடம் தெரிவிப்பு‘!
காஸா பகுதியில் இராணுவ நிலை நிலவுவதால், எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக இருப்பு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எரிபொருள் வாங்க போதிய நிதி இல்லாததாலும், எரிபொருளை சேமிப்பதற்கு போதிய வசதிகள் இல்லாததாலும் தற்போது 30 நாட்களுக்கு போதுமான எரிபொருளே இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கோப் குழுவிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. ஒரு தற்காப்பு எரிபொருள் இருப்பை பராமரிக்க, சுமார் ஐநூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஒரு மாதத்தில் எரிபொருளை பராமரிப்பதற்கு 300 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய கையிருப்பை பராமரிப்பது சிரமமான போதிலும் அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை எரிபொருளை வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கோப் குழுவிற்கு அறிவித்துள்ளார்.